மதுரையில் அடுத்தடுத்து 4 பிரபல நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : அலற விட்ட இமெயில்!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2024, 1:54 pm

மதுரையில் உள்ள பிரபல தங்கு விடுதிகளான நட்சத்திர ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஜெஸி ரெஸிடென்ஸி, விமானநிலைய சாலையில் உள்ள அமீகா ஹோட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரை ரெஸிடென்ஸி, காளவாசல் அருகே உள்ள ஜெர்மானுஸ் ஹோட்டல் உள்ளிட்ட 4 நட்சத்திர ஓட்டங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

உடனடியாக நான்கு இடங்களுக்கும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை தனித்தனி பிரிவுகளாக சென்று ஓட்டல் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.

நான்கு நட்சத்திர ஹோட்டல்களிலும் வெளி மாவட்டங்கள் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் தங்கும் பிரபல நட்சத்திர ஓட்டல் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி இருந்தவர்கள் இந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையால் அச்சம் அடைந்துள்ளனர்.

  • Arya and Santhanam reunion வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!