தமிழகத்தில் அடுத்தடுத்து பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மின்னஞ்சலுக்கு வந்த பரபரப்பு கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 6:07 pm

தமிழகத்தில் அடுத்தடுத்து பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மின்னஞ்சலுக்கு வந்த பரபரப்பு கடிதம்!!

கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் பத்ம சேஷாத்ரி பள்ளி(PSBB) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் வடவள்ளி போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பள்ளியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசாரும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.இந்த தகவல் பரவிய நிலையில், பதற்றமடைந்த குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளி முன்பாக திரண்டு பதற்றத்துடன் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

மேலும் பள்ளி வாகனங்களில் வரும் குழந்தைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.இதே போல் சென்னை பள்ளியிலும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ