முன்விரோதம் காரணமாக பத்திர எழுத்தர் வெட்டிக் கொலை : பட்டப்பகலில் நடந்த கொலையால் மக்கள் அச்சம்

Author: Babu Lakshmanan
15 February 2022, 9:14 am

கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பத்திர எழுத்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. அதே பகுதியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரை நேற்று மாலை முத்துக்குமார் என்பவர் அழைத்து நல்லாம்பாளையம் வரக்கூறினார். தொடர்ந்து தனது அலுவலகத்தில் பணியாற்றும் பிரியா என்ற பெண்ணுடன் காரில் அங்கு சென்றார்.

அப்போது முத்துக்குமார் மற்றும் ராஜன் ஆகியோர் அங்கு இருந்தனர். முத்துக்குமாரிடம் ரூ.50 லட்சம் பணம் வாங்கிக் கொண்ட பொன்னுசாமி நிலம் ஒன்றுக்காக பவர் எழுதி கொடுத்ததாகவும், ஒரு மாதத்திற்கு முன்பு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு பவரை கேன்சல் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பேசிக் கொண்டிருந்த போது இருதரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது முத்துக்குமார் மற்றும் ராஜன் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பொன்னுசாமியின் கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதை பார்த்த பிரியா அலறியடித்து ஓடினார்.

தொடர்ந்து முத்துக்குமார் மற்றூம் ராஜன் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பொது இடத்தில் நடைபெற்ற இந்த கொலையால் நல்லாம்பாளையம் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1989

    0

    0