கரூரில் முதல்முறையாக புத்தக திருவிழா.. ஆயிரம் பேர் அமரும் வகையில் சிறப்பு ஏற்பாடு : தேதியை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 6:18 pm
Minister Senthil Balaji - Updatenews360
Quick Share

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறைசார்பில் காவிரி ஆறு வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கையை உட உடனடியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு நிதிகளை கொண்டு கரூரில் முதன் முறையாக புத்தக திருவிழா 19ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. 100 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் இடம் பெற இருக்கின்றன. காலை 10 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மாலை 4 மணி முதல் 8 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் போன்ற சான்றோர்கள் பங்கு பெற்று சிறப்பிக்க உள்ளனர்.

அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான, புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 1000 பேர் அமர்ந்து ரசிக்க கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த கண்காட்சியில் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தக திருவிழாவில் பங்கு பெற பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 605

    0

    0