WTC-யோட கடைசி வாய்ப்பும் பறிபோனது…5-வது டெஸ்டில் மண்ணை கவ்விய இந்திய அணி…!
Author: Selvan5 January 2025, 11:02 am
இமாலய வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா அணி..!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து,உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
பரபரப்பாக சிட்னியில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி மூன்றவாது நாள் ஆட்டத்தில் ஆறு விக்கெட் இழப்புக்கு 145 ரன்களுடன் களமிறங்கியது.ஓரளவுக்கு தாக்கு பிடிச்சு 200 ரன்களுக்கு மேல் இலக்கை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஆஸ்திரேலியா பவுலர்களை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய கேப்டன் பும்ராவுக்கு முதுகுவலி பிரச்சனை ஏற்பட்டது,இதனால் இன்றய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்,அவர் பேட்டிங் ஆட களத்திற்கு வந்தார்,ஆனால் அவர் பவுலிங் போட வரவில்லை.
இதையும் படியுங்க: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!
இதனால் இந்திய ரசிகர்கள் இந்த ஆட்டம் நம் கையை விட்டு போய்விட்டது என எண்ண தொடங்கினார்கள்.அதன்பின்பு 161 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து,மிக எளிதாக ஆட்டத்தை வெற்றி பெற்றது மட்டுமல்லாமல்,தொடரையும் கைப்பற்றியது.இதனால் கடந்த 10 வருடமாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை கையில் வைத்திருந்த இந்திய அணி மோசமான வரலாற்றை படைத்தது மட்டுமல்லாமல் WTC-FINALS செல்லும் வாய்ப்பையும் இழந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.