பாம்பன் பாலத்தை கம்பீரமாக கடந்த எல்லை பாதுகாப்பு ரோந்து கப்பல்கள்: ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!!

Author: Rajesh
31 January 2022, 6:10 pm
Quick Share

இராமநாதபுரம்: பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து சென்ற எல்லை பாதுகாப்புப் படைக்குச் சென்ற சொந்தமான ரோந்துக் கப்பல்களை சாலை பாலத்தில் நின்றவாறு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

ராமேஸ்வரம் அடுத்துள்ள உலக புகழ்பெற்ற பாம்பன் தூக்குப் பாலத்தின் வழியாக கொல்கத்தா – அந்தமான் தீவுகளுக்கு செல்லலாம். அதேபோல் இந்த தூக்கு பாலத்தின் வழியாக தான் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவையானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் எல்லை பாதுகாப்பு படைக்குச் சொந்தமான 3 அதிநவீன ரோந்து படகுகள் கொச்சினில் இருந்து மேற்குவங்கம் செல்வதற்காக பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தது. இந்த 3 ரோந்து படகுகளும் கடந்த வெள்ளிக்கிழமை காலை பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டு, மேற்கு வங்கம் செல்ல பாம்பன் துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்தது.

https://youtu.be/6Oxq0D6ENsw

ஆனால், மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் திடீரென ஏற்பட்ட கடல்சீற்றம் மற்றும் சூறைக்காற்றுடன் கடல் நீர்மட்ட உயர்வு, கடல் நீரோட்டம் உள்ளிட்டவற்றால் தவிர்க்க முடியாத காரணத்தால் கடைசி நேரத்தில் இந்த ரோந்து படகுகள் பாம்பன் பாலம் வழியாக கடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் இன்று காலை இந்த ரோந்து கப்பல்கள் பாம்பன் தூக்குபாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது.
குறிப்பாக இன்று காலை முதல் பாம்பன் பகுதியில் கடல் சீதோஷண நிலை சீராக இருந்ததால் இந்த படகு பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து செல்லலாம் என மீண்டும் துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டு சென்றது. பின்னர் உள்ளூர் மீன்பிடி விசைப்படகுகளும், சில படகுகளும் அதனை தொடர்ந்து பாம்பன் பாலம் வழியாக கடந்து சென்றது. பாம்பன் பாலம் வழியாக இந்த 3 ரோந்து கப்பல்களும் அடுத்தடுத்து கடந்து சென்றது.

இதனை பாம்பன் சாலை பாலத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்ததுடன் தங்களது போனில் வீடியோ மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 2147

    0

    0