திண்டுக்கல் : நத்தம் அருகே பாலியல் இச்சைக்கு உடன்படாத தம்பியின் மனைவி மற்றும் குழந்தை எரித்து கொலை.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மலையூர் அடுத்த வலசு பகுதியை சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. சிவக்குமாருக்கு அஞ்சலை (வயது 21) என்ற மனைவியும், 2 வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று (சனிக்கிழமை) சிவகுமார் புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாலை அஞ்சலை அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு விறகு வெட்ட சென்ற கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தபோது இதற்கு அஞ்சலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அஞ்சலையை அரிவாளால் வெட்டி கொலை செய்த கருப்பையா அஞ்சலையின் 2 வயது பெண் குழந்தையையும்கொலை செய்து தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. தோட்டத்து பகுதியிலிருந்து புகை வருவதை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி உள்ளிட்ட போலீஸார் விசாரணை செய்ததில் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பையாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தம்பியின் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.