இது உங்க கண்ட்ரோல் ஏரியா.. மாநகராட்சி, நெடுஞ்சாலை துறையின் நீயா நானா போட்டியில் அவதிப்படும் மக்கள்..!

Author: Vignesh
26 August 2024, 7:08 pm

நீயா நானா போட்டியில் கழிவுநீர் வாய்க்காலை அடைத்ததால் வீடு மற்றும் கல்லறை தோட்டத்திற்குள் கழிவுநீர் செல்வதாக கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என அனைவரும் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ஏபி நகர் அந்தோணியார் தெரு.சவேரியார் பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களின் கல்லறை தோட்டம் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் குடை பாறைப்பட்டி அருகே உள்ளது.

அதேபோல், சாலையில் இருபுறமும் குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையை உடைத்து ஒரு பகுதியில் கழிவு நீரை கொண்டு சென்றதாகவும், அந்த கழிவு நீரை ஒரு சிலர் மாநகராட்சி அதிகாரிகள் ஆதரவுடன் அடைத்து வைத்ததால், இப்போது கழிவு நீர் அனைத்தும் கல்லறை தோட்டத்திற்குள் தொடர்ந்து சென்று வருவதாகவும், அதேபோல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கழிவு நீர் அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் செல்வது மட்டுமல்லாமல் சாலையிலும் ஐந்து இடங்களுக்கு மேற்பட்ட பகுதிகளில் கழிவு நீர் தொடர்ந்து தேங்கியுள்ளது.

இதனால், துர்நாற்றம் வீசுவதும் தொற்று நோய் ஏற்படுவதும் அதேபோல் கல்லறை தோட்டத்தில் போக முடியாத நிலையிலும், சாலையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் கழிவு நீர் செல்வதால் தொற்றுநோயம் ஏற்பட்டு வருவதாகவும், இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நீயா நானா போட்டியில் யாரும் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் குடை பாறைப் பட்டி அருகே கோவில் மணி அடித்து, மரங்களை சாலையில் போட்டும் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் காரணமாக சாலையில் இரு பகுதிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வராதால் காவல்துறை அதிகாரிகளே சாலை மறியலில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 158

    0

    0