அலட்சியம்.. குடிநீருடன் கலந்த கழிவுநீர்; தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!

Author: Vignesh
29 June 2024, 2:43 pm

தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பீகாரை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது முன்னதாக, குடிநீரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வருவதாக பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் தங்கையான 7 வயது சிறுமிக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருகில் உள்ள கடையில் காலாவதியான உணவை சாப்பிட்டாரா? என்ற கோணத்திலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…