2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2025, 3:45 pm

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி – பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே 13.04.25 அன்று 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சல் செய்பவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து கன்னிவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மதுரையில் பெற்றோர் இல்லாமல் சக்தி விடியல் ஆசிரமத்தில் மாரியம்மாள் என்பவர் வளர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

12ஆம் வகுப்பு முடித்து பின்பு மதுரையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, திண்டுக்கல் நத்தம், சாணார்பட்டி எமகாலபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.

பின் பிரவீன் மற்றும் மாரியம்மாள் இணைந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் துணிக்கடையில் (Unlimited) வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

பிரவீன் பாதுகாவலராக கையெழுத்திட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் மாரியம்மாளை சேர்த்து விட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடங்களாக திண்டுக்கல்லில் இருவரும் இருந்துள்ளனர். இரண்டு முறை மாரியம்மாள் தனது கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாரியம்மன் பிரவீனை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், காதலியான மாரியம்மாளை அமைதி சோலை அருகே கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின் கொலையை மறைக்க பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துள்ளார்.

மேலும் எரிந்த நிலையில் கிடைக்கப் பெற்ற பெண்ணின் சடலம் யார் என்று தெரியாத நிலையில் பெண்ணின் அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டனர்.

பிரவீன் தான் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக காவல் நிலையத்திற்கு அவரை சென்று காவல்துறையினர் தெரிவித்த அடையாளம் தனது காதலி என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Boy Friend Killed his lover and burned

பின் காவல்துறையினருக்கு பிரவீன் மீது சந்தேகம் ஏற்பட அவரை விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரவீன் எவ்வாறு கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • kamal haasan travel to america for film city ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?
  • Leave a Reply