காதலியோடு பைக்கில் சென்ற நபர்.. ரத்தக்காயங்களோடு போராட்டம் : கோவையில் கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2025, 1:44 pm

கோவை மாவட்டம் வேடப்பட்டி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் நேற்று தன்னுடைய நண்பர் குரு பிரசாத்துடன் இணைந்து, சிங்காநல்லூர் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் அமர்ந்து மது குடித்து உள்ளனர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஜோடி, இவர்கள் அமர்ந்து இருந்த இடத்தின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்று உள்ளனர்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அந்த ஜோடி, வண்டியின் மேல் வைத்து சென்ற ஹெல்மெட்டை காணவில்லை என்று சதீஷ்குமார் மற்றும் குரு பிரசாத்திடம் கேட்டதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் தாங்கள் எடுக்கவில்லை என கூறி உள்ளனர்.

இதையும் படியுங்க : நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர்.. கோவையில் சினிமாவை மிஞ்சிய ஷாக் சம்பவம்!

இவர்களும் அந்த ஜோடியை விசாரித்த போது அந்த ஆணின் பெயர் விக்னேஷ் என்பதும் அந்தப் பெண்ணின் பெயர் சௌந்தர்யா என்பதும் தெரிய வந்தது. மீண்டும் அவர்கள் ஹெல்மட்டை எடுக்கவில்லை என மரியாதையாக கூறி உள்ளனர்.

ஆனால் விக்னேஷ் என்னுடைய ஹெல்மெட்டை கொடுங்கடா குடிகார நாய்களா என்று கூறி தகாத வார்த்தைகளால் பேசி, தன்னுடைய பாக்கெட்டில் வைத்து இருந்த கத்தியை எடுத்து சதீஷின் தோள்பட்டை, வலது முதுகு தலை மற்றும் பல இடங்களில் குத்தி இருக்கிறார்.

இதைக் கண்ட வழியே வந்த பார்த்திபன் மற்றும் கௌதம் ஆகியோர் சண்டையை தடுத்து நிறுத்தி, சதீஷை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு இருந்து விக்னேஷ் தப்பிய ஓடியதாக தெரிகிறது.

இதுகுறித்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் சதீஷிடம் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் புகார் பெற்று விசாரணை மேற்கொண்டதில் கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் என்பதும் தெரிய வந்தது.

Boy Friend stabbed on man

விக்னேஷை கைது செய்து அவரிடம் இருந்து கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கோவையில் காதலியோடு சென்ற நபரின் கொடூரச் செயலால் சதீஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!