ஏலகிரியில் திருமணம், ஊட்டியில் தேன்நிலவு : மோகம் முடிந்ததும் காதல் மனைவியை கைவிட்ட இன்ஸ்டா காதலன்!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2025, 11:59 am

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த நெடுங்கள் அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரது மகன் பெரியண்ணன்.

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்னி பாத் மூலமாக ராணுவத்திற்கு சேர்ந்த இவர் மத்திய பிரதேஷ் ஜெப்பல்பூர் எனும் பகுதியில் ராணுவ வீரராக பணி செய்து வருகிறார்.

இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவன் என்பது மகள் அனுப்பிரியா என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி நட்பாக இருந்துள்ளனர்.

நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்து காதலர்கள் இன்ஸ்டாகிராம் மூலமாகவே தங்களது அன்பை ஆன்லைன்னில் பரிமாறிக் கொண்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில் அனுப்பிரியாவின் வீட்டில் அனுப்பிரியாவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் இதுகுறித்த தகவலை instagram காதலன் பெரியண்ணனுக்கு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த பெரியண்ணன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ராணுவத்திலிருந்து விடுமுறை பெற்று 15 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

ஊருக்கு வந்த கையுடன் போச்சம்பள்ளிக்கு வந்து கடந்த 28ஆம் தேதி அனுப்பிரியாவை அழைத்துக் கொண்டு அவரது நண்பர் உதவியுடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்று அங்கு உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.

திருமணம் முடிந்த கையுடன் ஹனிமூன் கொண்டாட ஊட்டிக்குச் சென்று அங்கு ஹோட்டலில் அரை எடுத்து தங்கி தேன் நிலவையும் கொண்டாடியுள்ளனர்.

நான்கு நாட்கள் முடிந்த நிலையில் ஹனிமூன் போர் அடிக்கவே அனுப்பிரியாவை, பெரியண்ணன் அவரை ஊருக்கு அழைத்து வந்துள்ளார். அப்பொழுது பெரிய அண்ணன் பாட்டி இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் அனுப்பிரியவை விட்டுவிட்டு வரும்படி கூறி சண்டையிட்டதாக தெரிகிறது.

இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட அழைத்து வந்த வேலையில் இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு போலீசாரின் விசாரணையில் ராணுவ வீரர் பெரியண்ணன் இனி அவருடன் வாழ முடியாது என்று கூறி காவல் நிலையத்தில் அடாவடியுடன் கூறியுள்ளார்.

இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் உடன் அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களது புகார் குறித்து விசாரணை நடைபெற்றது.

ஆன்லைன் மூலம் நடைபெற்ற காதல் ஆஃப்லைனில் முடிந்த நிலையில் வாழ்க்கையை தொலைத்த பெண்ணின் நிலை தற்பொழுது பரிதாபமாக உள்ளது.

தாய் தந்தைக்கு தெரியாமல் இது போன்ற பல இளசுகள் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை நம்பி செல்லும் நிலையில் பலரது வாழ்க்கையும் தற்பொழுது ஆஃப்லைனில் உள்ளது வேதனையாக உள்ளது என பெற்றோர் வேதனைப்படுகின்றனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Leave a Reply