விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாத்திரத்திற்குள் சிக்கி தவிப்பு : 1 மணி நேரமாக போராட்டம்.. கண்ணீர் வடித்த தாய்.. என்ன நடந்தது?! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 6:25 pm

விழுப்புரம் அருகே பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்ட சிறுவன் 1 மணி நேரமாக போராடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் அடுத்த பெரியசெவலை புது காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களது 3 வது மகன் வசந்த் அவரது வீட்டில் வைத்திருந்த காலி தவளைகுள் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராவிதமாக தவளைக்குள் உடல் மற்றும் இரு கால்களும் மாட்டிக்கொண்டது.
அதிர்ச்சி அடைந்த தாய் பாக்கியலட்சுமி, தவளை உடன் அச்சிறுவனை ஆட்டோ மூலம் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.

பின் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையான தீயணைப்பு வீரர்கள். ஸ்டில் கட்டர், ஆஷா பிளேடு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தவளையை உடைத்து சிறுவனை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அச்சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு தாய் பாக்கியலட்சுமி கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி