தனிமையில் சந்தித்து சிறுமியுடன் காதலை வளர்த்த இளைஞர் : காதலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் சிறுமியை கொன்று காதலன் தற்கொலை!!!

Author: kavin kumar
27 February 2022, 1:14 pm

வேலூர் : காதலை ஏற்றுக்கொள்ளாததால் 16 வயது சிறுமியை கொலை செய்த இளைஞர் தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் சவுத் அவென்யூ பகுதியை சேர்ந்தவர்கள் பாரதிதாசன் தீபலட்சுமி தம்பதியர். இவர்களது 16 வயதுடைய மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாரதிதாசன், தீபலட்சுமி இருவரும் ஷூ தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். தீபலட்சுமியின் தாய் வீடான கருகம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதுடைய ராம்குமார். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.

கருகம்புத்தூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அடிக்கடி 16 வயது சிறுமி சென்று வந்த போது ராம்குமார் உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தாய் தந்தை இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர் ராம்குமார் சிறுமியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெற்றோர்கள் பாரதிதாசன் மற்றும் தீபலட்சுமியிடம் தெரிவித்துள்ளனர். ராம்குமாரின் வீடு தேடிச்சென்று அவர்களது பெற்றோரிடம் எச்சரித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பிய போது வீட்டில் மகள் தரையில் சடலமாகவும் மற்றும் ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த சத்துவாச்சாரி காவல் நிலைய காவலர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1679

    0

    0