கசந்து போன காதல்… தாலி கட்ட மறுத்ததால் காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2024, 5:29 pm

காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலியின் கழுதை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் கிராமத்தில் புதுத்தெருவைசேர்ந்தவர் அன்பழகன் மகள் கற்பகலட்சுமி என்ற அபிநயா வயது 21. இவர் தந்தை இறந்து விடவே தாயாருடன் வசித்து வருகிறார்.

காட்டுமன்னார்கோவில் செயல்படும் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படித்து குடும்ப சூழல் காரணமாக இடையில் நின்று விட்டார். தற்போது சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவரும் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த மதியழகன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மதியழகனின் நடத்தையில் சில மாறுபாடுகள் ஏற்பட்டதால் அவரை திருமணம் செய்து கொள்ள கற்பக லட்சுமி மறுத்த உள்ளார்.

மேலும் மதியழகன் நம்பரை பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் வெள்ளிக்கிழமை காலை கீழகடம்பூர் கிராமத்திற்குச் சென்று கற்பகலட்சுமி என்ற அபிநயாவை சந்தித்து பேசினார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கற்பக லட்சுமி கழுத்தில் வெட்டி விட்டு தெருவில் நடந்து சென்று உள்ளார்.

இதையும் படியுங்க: எனக்கே கொலை மிரட்டலா? நான் நெல்லைக்காரன்… இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் : மதுரை ஆதீனம்!

பலத்த காயமடைந்த கற்பகலட்சுமியின் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கற்பகலட்சுமியை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .

இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் கீழ்க்கடம்பூர் கிராமத்திற்கு சென்று விசாரணை செய்து கற்பகலட்சுமியை வெட்ட பயன்படுத்தப்பட்ட அரிவாளை பறிமுதல் செய்தனர்.மேலும் கற்பகலட்சுமியை வெட்டிவிட்டு தப்பியோடிய மதியழகனை தேடி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 243

    0

    0