டிராலி சூட்கேஸில் காதலி… பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்ற காதலனின் விநோத முயற்சி : டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2025, 5:00 pm

தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலம் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் பல்கலைகழகத்தில் பயின்று வந்த மாணவர், தனது காதலியை மாணவர் விடுதிக்குள் அழைத்து செல்ல திட்டம் போட்டார்.

இதையும் படியுங்க: செய்தியாளர்கள் கேட்ட கேள்வி… காரில் ஏறி புறப்பட்ட முன்னாள் அமைச்சர்!

டிராலி சூட்கேஸில் காதலியை மறைத்து சுலபமாக அழைத்துசெல்லலாம் என எண்ணிய ஜோடி, சூட்கேஸில் காதலியை மறைத்து விடுதிக்குள் மாணவர் தூக்கி செல்ல முடியாமல் நுழைந்தார்,

அப்போது படிக்கட்டு பட்டு உள்ளிருந்த காதலி சத்தம் போட்டுள்ளார். சந்தேகமடைந்த விடுதி காவலர்கள், சூட்கேஸை திறந்து பார்த்த போது உள்ளே பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுக்க, தற்போது அது இணையத்தில் பரவி வருகிறது. விசாரணையில், அந்த பெண் தனது காதலி என்றும், யாருக்கும் தெரியாமல் விடுதிக்குள் அழைத்து செல்ல திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

  • actor sri ‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!
  • Leave a Reply