விழுப்புரத்தில் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2023, 11:09 am

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் களையூர் கூட்டு சாலை பகுதிகளில் பீர் பாட்டில் வீசி பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடி பாண்டிச்சேரி டு கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டார்மங்கலம் என்ற பகுதியில் அந்த வழியாக சென்ற இரண்டு அரசு பேருந்துகளையும், ஒரு தனியார் பேருந்துகளையும், ஒரு லாரியும் பீர் பாட்டில்கள் வீசி கண்ணாடிகளை உடைக்கப்பட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த செஞ்சி போலீசார் விரைந்து சென்று இந்த சம்பவத்தை ஏற்படுத்திய பாமக நிர்வாகி அறிவழகன் என்பவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை செய்ததில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தெரிய வந்த நிலையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று நெய்வேலி வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பாமக ஆதரவு அளித்து வருவதால்
அதன் எதிரொலியாக நேற்று நள்ளிரவு புதுச்சேரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டார்மங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த 3 அரசு பேருந்து 1 தனியார் பேருந்து மற்றும் ஒரு லாரியின் கண்ணாடியை சோடா பாட்டில் மற்றும் பீர் பாட்டில் கொண்டு உடைத்தவரை செஞ்சி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற சம்பவம் பேருந்தில் அமைக்கப்பட்ட கேமராவில் பதிவான சிசிடி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…