மார்பக புற்றுநோய் எளிய சிகிச்சைக்கு வடமாநிலத்தவர் குவியும் நாமக்கல் தங்கம் மருத்துவமனை… மருத்துவர் தீப்தி மிஸ்ரா பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2024, 6:15 pm

நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தங்கம் மருத்துவமனையில்புற்று நோய்க்கான சிகிச்சை பெறும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் தன்னார்வலர்களுக்கு பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் உள்ள அரங்கில் நடைபெற்றது. தங்கம் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனரும் மருத்துவர் விமான இரா.குழந்தைவேல் தலைமை தாங்கினார். மருத்துவர் மல்லிகா குழந்தைவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, கரூர் வைசியா வங்கியின் சி ஆர் எஸ் தலைமை அதிகாரி வைத்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Thangam Hospital Event 02

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் தீப்தி மிஸ்ரா புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் இலவச மார்பக புற்றுநோய் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தி வருகிறோம். இம்மருத்துவமனைக்கு வடமாநிலங்களில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற வந்து கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் அனைவரும் ஆண்டுதோறும் மார்பகத்தை 3 விரல் 3 நிமிடம் 3 நாள் லேசான அழுத்தம் கொடுத்து வந்தாலே அதனை சீர்படுத்தி விடலாம்.

Dr.Deepti Mishra.JPG

பல வகைகளில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் தந்தும் பெண்கள் பலரும் மருத்துவமனை வருவதில்லை. பெண்கள் தாங்களாகவே முன்வந்து மார்பக புற்றுநோய் குறித்து அறிந்து கொள்ளலாம். எளிமையான வகையில் அதற்கான திட்டங்களை தந்துள்ளோம். இந்தியாவில் 360 க்கு மேல் மருத்துவமனைகள் இருந்தாலும் ஒரு நடுத்தர ஊரான நாமக்கல்லில் இது போன்ற ஒரு சிறந்த மருத்துவமனை வேறு எங்கும் இல்லை.

Thangam Hospital Event.JPG

தங்கம் மருத்துவமனை சார்பில் கடந்த மாதத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு மெமோகிராம் பரிசோதனை செய்து பார்த்ததில் 60க்கும் மேற்பட்டோருக்கு கட்டிகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Thangam hospital pamphlet

இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தங்கம் மருத்துவமனையில் மட்டும் ரேடியாலஜி சிகிச்சைக்கென பெண் மருத்துவர் உள்ளார். தொடர்ந்து நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாத்து வருவதில் நம் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 164

    0

    0