DTCP அப்ரூவலுக்கு ரூ.2 லட்சம்… கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய உதவி பொறியாளர்!!

Author: Babu Lakshmanan
26 July 2022, 10:06 pm

கோவை : பொள்ளாச்சி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கோவை பொள்ளாச்சியை அடுத்த ஏரிப்பட்டியை சேர்ந்த செல்வ பிரபு என்பவர் நிலத்திற்கு DTCP ஒப்புதல் பெறுவதற்காக தடையில்லா சான்று வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். நிலத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக உதவி பொறியாளர் செந்தில்குமார் என்பவர் 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

முதல் தவணையாக உதவிப் பொறியாளர் செந்தில்குமாரிடம் 30,000 கொடுத்துள்ளார். பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்து நின்றிருந்தனர்.

இரண்டாவது தவணை பணத்தை உதவி பொறியாளரிடம் செல்வ பிரபு கொடுக்கும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையளவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 811

    0

    0