டிராக்டருக்கு மானியம் வழங்க விவசாயியிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம்.. உதவி பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

Author: Babu Lakshmanan
19 May 2022, 10:14 pm

கரூரில் விவசாயிடம் டிராக்டர் வாங்க அரசு மானியம் வழங்க 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்தது கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் குழுமணியை அடுத்து மேலபாண்டமங்களம் கிராமத்தை சார்ந்தவர் சுரேஷ். விவசாயியான இவர் புதிதாக டிராக்டர் அரசு மானியத்தில் வாங்க முடிவு செய்து குளித்தலை கோட்ட உதவி பொறியாளர் கார்த்திக்கை நாடியுள்ளார். அதற்கு கார்த்திக் டிராக்டர் மானியம் வழங்க 22,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கார்த்திக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கார்த்திக் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் உதவி பொறியாளர் கார்த்திற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி