ரூ.6,000 கொடுத்தா பட்டா மாற்றம் செய்து தாரேன் : லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது!!

Author: Babu Lakshmanan
30 June 2022, 6:14 pm

காஞ்சிபுரம் : பட்டா மாட்டம் செய்ய ரூ.6,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (45). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குணகரம்பாக்கம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். மகாதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் பட்டா மாற்றம் செய்ய விஏஓ உதயகுமாரை நாடி உள்ளார்.

பட்டா மாற்றம் செய்து தருவதற்கு உதயகுமார் ரூ. 8,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதில், 6000 பணம் தருவதாக தினேஷ் தெரிவித்துள்ளார். மேலும், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத தினேஷ் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி, இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தினேஷ் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் அளித்த போது, மறைந்திருந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் உள்ள முக்கிய ஆவணங்கள் பற்றிய தகவல்களை அதிகாரிகள் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 760

    0

    0