எல்லாத்துலயும் லஞ்சம்.. மிரட்டும் அதிகாரிகள் : நகராட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 8:11 pm

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிய ஜனதா கோவில்பட்டி நகராட்சி கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதியில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோவில்பட்டி நகராட்சி நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகராட்சியை கண்டித்து கோஷமிட்டனர்

சொத்து பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பதாகவும், புதிதாக தீர்வு போட அநியாயமாக லஞ்சம் கேட்பதாகவும், பொது கழிப்பறைகளை குத்தகைக்கு விடாமல் ஆளுங்கட்சி குண்டர்கள் வசூல் செய்வதை கண்டித்தும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பகுதியில் உள்ள ரோடுகள் சாக்கடை வசதி செய்து கொடுக்கின்றனர். எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்கின்றனர்.

பழைய காண்ட்ராக்டர் வேலை பில் பாஸ் பண்ண விடாமல் புறக்கணிப்பதையும் ஆளுங்கட்சி ஆதரவு பெற்று சில கான்ட்ராக்டர்களை தினமும் வசூல் ஆகும் வருவாயை உடனடியாக பணம் பட்டுவாடா செய்யும் செய்யுமாறு அதிகாரிகளை மிரட்டுவதாகவும் பல ஊழல் லஞ்சங்களை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் சீனிவாசன் நகர தலைவர் செயலாளர் விஜயகுமார் அசோக் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…