சார் பதிவாளர் அலுவலகத்தில் புரண்ட லஞ்சம்… அடுத்தடுத்து புகார் : மிரள வைத்த சோதனை.. கட்டு கட்டாக பணம்!
Author: Udayachandran RadhaKrishnan5 September 2024, 7:39 pm
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் (பொறுப்பு) தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 5 மாலை 4 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 66,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில் பணம் சிக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரகண்டநல்லுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கண்ட திடீர் சோதனையில் அங்கு இருந்த இடைத்தரகர்கள் மற்றும் சார்பதிவாளர் அய்யன்னார் (பொறுப்பு) ஆகியோரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் வானூர் திண்டிவனம் அரகண்டநல்லூர் திண்டிவனம் வானூர் மூன்று சார் பதிவாளர் அலுவலகத்திலும் கண்டாச்சிபுரம் மின்வாரிய அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் என ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0