வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு : மர்மநபர்களுக்கு போலீசார் வலை… சிசிடிவி காட்சி வெளியீடு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 1:28 pm

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள அலமேலு நகரை சேர்ந்த ஹரிஷ் பாபு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல ஹரிஷ் பாபு வேலைக்கு சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவருடைய தந்தையும் தாயாரும் வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில் ஹரிஷ் பாபு அவர் வேலை செய்யும் இடத்தில் உள்ள இளங்கோ என்பவரை வீட்டிற்கு அனுப்பி வீட்டை பூட்டிவிட்டு வரச் சொல்லியுள்ளார்.

அதன் பின்பு நேற்று காலை வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக ஹரிஷ் பாபுவிற்கு தகவல் தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஹரிஷ் பாபு உடனடியாக வீட்டிற்கு விரைந்துள்ளார். அப்போது உள்ளே சென்று பார்க்கும் போது வீட்டில் இருந்த ஆபரண தங்கங்கள், வளையல்கள், வைர நகைகள் என மொத்தம் 67 பவுன் தங்க நகைகளும் 2 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹரிஷ் பாபு உடனடியாக சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் தற்பொழுது முதல் கட்டமாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 673

    0

    0