இன்னொரு சோனாகாச்சியா கள்ளக்குறிச்சி? பெண்களுடன் சிக்கிய புரோக்கர்கள் : அதிர வைத்த சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2024, 1:18 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் பாலியல் தொழிலில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களை சிலர் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி கவர பகுதியில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராபிட்சன் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின்போது கவரை தெரு பகுதியில் பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர்கள் ஆன வீரமணி, தர்மராஜ், தங்கராசு மற்றும் செந்தில்குமார், பாண்டியன் என 5 ஆண்கள் மற்றும் அமுதா, அலமேலு, வித்யா,இந்துமதி என்ற நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேரையும் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் பாலியல் குற்ற சம்பவங்களில் பெண்களை ஈடுபடுத்தி இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த ஒன்பது பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே கள்ளச்சாரையும் அருந்தி கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இப்போது இன்னொரு பரபரப்பானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி நகர பகுதி மற்றும் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதிகளில் இதுபோல பாலியல் குற்றச்சம்பங்கள் நெடு நாட்களாகவே இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.

அதேபோல திருக்கோவிலூர் அருகே மாடாபூண்டி கூட்ரோடு பகுதியில் காலை 6:00 மணி முதல் செடி, கொடிகளில் மறைக்க வைக்கப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வரலாறு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் பாலியல் குற்றச்சம்பவங்கள், கள்ளத்தனமான மது விற்பனைகள் இப்படி எண்ணற்ற செயல்கள் அரங்கேறி வருவதால் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!