சொந்த சகோதரி மீது அலாதி காதல்.. 2 வயது குழந்தையைக் கொன்ற கொடூர அண்ணன்!
Author: Hariharasudhan1 February 2025, 6:54 pm
கேரளாவில், தனது சொந்த சகோதரி மீது ஒருதலைக் காதல் கொண்ட சகோதரன், இடையூறாக இருந்த சகோதரியின் 2 வயது குழந்தையைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அடுத்த பலராமபுரத்தில் ஸ்ரீது – ஸ்ரீஜித் தம்பதியி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவேந்து என்ற 2 வயது மகன் உள்ளார். இந்த நிலைய்ல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது.
இதனால் பதற்றமான பெற்றோர், வீட்டின் எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனால், குழந்தை கிடைக்காததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிரமாகத் தேடினர். இதனையடுத்து, குழந்தையின் உடல் அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், குழந்தையின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரது பெற்றோர் மற்றும் மாமாவிடம் விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில், ஹரிகுமார் என்பவர், உயிரிழந்த குழந்தையின் தாயான ஸ்ரீதுவின் சொந்த சகோதரி ஆவார். ஆனால், இவரை ஹரிகுமார் காதலித்து வந்துள்ளார். அவர் திருமணமான நிலையிலும், ஹரிகுமார் தனது சகோதரி மீதான காதலை மாற்றவில்லை.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மதிய உணவில் பல்லி.. வாந்தி, மயக்கத்தால் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!
இந்த நிலையில், தனது சகோதரியின் குழந்தை தனது காதலுக்கு தடையாக இருப்பதாக நினைத்த ஹரிகுமார், குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர், ஹரிகுமாரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.