அருவாமனையால் தாக்கி பெண் கொடூர கொலை : தலைமறைவான கணவன்… விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2022, 4:46 pm

திருத்துறைப்பூண்டியில் மனைவியை அருவாமணையால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் சேகல் ஊராட்சி மடப்புரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேதையன் (வயது 50), மனைவி லதா (வயது 45).

இருவருக்கும் இன்று காலை நான்கு மணி அளவில் ஏற்பட்ட தகராறில் கணவன் அருவாமனையால் தாக்கியதில் மனைவி லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடததிற்கு வந்து பார்த்தபோது லதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன் டிஎஸ்பி சோமசுந்தரம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறையினர் லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள வேதையனை காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 552

    0

    0