இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2025, 12:50 pm
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, அதிக அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,சூலூர் பீடம் பள்ளி கள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது தந்தை பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில், தாயாரும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
வீட்டில் தனியாக வசித்து வரும் ராஜேந்திரன் வீட்டின் அருகாமையில் உள்ள மாட்டு கொட்டகையை பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர் நாய்கள் வளர்ப்பதற்காக வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்க: 40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!
கடந்த 45 நாட்களாக தங்கியிருந்த ரம்யாவை பார்ப்பதற்காக அவ்வப்போது சிலர் ஆட்டோவில் வந்து செல்வது ராஜேந்திரனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், மாட்டு கொட்டகையை காலி செய்யுமாறு ரம்யாவிடம் ராஜேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூர் காவல் நிலையத்திலும் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.
நேற்றும் வழக்கம் போல் ரம்யாவை பார்ப்பதற்காக சிலர் ஆட்டோவில் வந்துள்ளனர். அவர்களை உள்ளே வர வேண்டாம் என ராஜேந்திரன் தடுத்துள்ளார். இதனால் ரம்யாவுக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ரம்யாவின் கழுத்துப்பகுதியில் வெட்டி படுகொலை செய்துள்ளார்.
பின்னர், கொலை செய்த அரிவாளுடன் சூலூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாட்டு கொட்டகை தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
