வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கிரைண்டர் வயரால் கழுத்தை இறுக்கி கொடூர கொலை : சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan12 September 2022, 1:44 pm
கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கைகளை கட்டி,கழுத்தை கிரைண்டர் வயரால் இறுக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச்சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி மயிலாத்தாள் (வயது 77). கணவர் ராமசாமி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மனநலம் பாதிக்ககப்பட்ட மகனும் கடந்த 20 ஆண்டுக்களுக்கு முன் மாயமானார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி இரு தினங்களாக வெளியில் வரவில்லை. மேலும் அப்பகுதியை கடந்து சென்ற பழவியாபாரி சிவக்குமார் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிவதாக மூதாட்டியின் சகோதரி கண்ணம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் வந்த கண்ணம்மாள் வீட்டைத்திறந்து பார்த்தார். அப்போது மூதாட்டியின் கைகள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டபட்டு, கழுத்து கிரைண்டர் வயரால் இறுக்கப்பட்டு கொலை செய்யபட்டு கிடைந்தார்.
இது தொடர்பாக கண்ணம்மாள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யபட்ட மூதாட்டியின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் நகைக்ககாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது மூதாட்டி தனியாக இருப்பதால் சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.