பட்ஜெட் எதிரொலி.. சரிந்த தங்கம் விலை : மேலும் குறைய வாய்ப்பா? இதுதான் சரியான நேரம்!
Author: Udayachandran RadhaKrishnan23 July 2024, 3:56 pm
நாடாளுமன்றத்தில் இன்று 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அப்போது பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கும் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550-க்கும் விற்பனையாகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் முதன்முறை.. கணவர் ஆட்சியர், மனைவி மாநகராட்சி ஆணையர் : அதுவும் ஒரே இடத்தில்.!!
தங்கம் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.3.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 92.50-க்கும் கிலோவுக்கு ரூ.3100 குறைந்து பார் வெள்ளி ரூ.92,500-க்கு விற்கப்படுகிறது.
பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.