நாளை பட்ஜெட் தாக்கல்… தடையை தாண்டி.. வளர்ச்சி நோக்கி : லோகோ வெளியிட்ட தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2024, 7:39 pm

நாளை பட்ஜெட் தாக்கல்… தடையை தாண்டி.. வளர்ச்சி நோக்கி : லோகோ வெளியிட்ட தமிழக அரசு!!

தமிழக அரசு சார்பில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களின் விரிவாக்கம் உள்ளிட்டவற்றிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த முத்திரை சின்னத்தில் தடை தாண்டி … வளர்ச்சி நோக்கி என்ற முழக்கம் இடம் பெற்றுள்ளது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?