பட்டாகத்தியுடன் புல்லட் திருட்டு… மர்மகும்பல் கைவரிசை : வைரலாகும் ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2023, 2:08 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையபட்டியில் வசித்து வருவர் முகமது பாசித். இவர் பிசியோதெரபி மருத்துவம் முடித்துவிட்டு மதுரையில்
தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.‌

இவர் தனது பயன்பாட்டிற்காக ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 வாலிபர்கள் அவர் வீட்டிற்கு முன் நிறுத்தி வைத்திருந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை பட்டா கத்தியுடன் வந்து திருடி செல்கின்றனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டிற்கு முன் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://vimeo.com/813785834

இதுகுறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் முகமது பாசித் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 513

    0

    0