நான் எப்படியாவது பந்து வீசுவேன்…நெகிழ்ச்சி அடைய செய்த பும்ரா…ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..!
Author: Selvan4 January 2025, 8:56 pm
காயத்தோடு களமிறங்கும் சிங்கம்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது.இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக்கோப்பை போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
இதனால் ஆட்டத்தின் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.இன்று நடந்த 2 ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவெளிக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக வெளியே சென்றார்.உடனே அவரை மருத்துவக்குழு ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.
தற்போது ஸ்கேனில் பும்ராவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் இது தசைப்பிடிப்பு மாதிரி தான் உள்ளது என ரிசல்ட் வந்துள்ளது.இருந்தாலும் பும்ராவுக்கு ஏற்கனவே முதுகில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவரை பந்து வீச அனுமதிக்க வேண்டாம் என இந்திய அணியின் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியும் 6 விக்கெட்களை இழந்து 145 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது ஒரு வேளை இந்திய அணி 250 ரன்களுக்கு குறைவாக இலக்கை நிர்ணயித்தால்,பும்ரா இல்லாமல் மற்ற பவுலர்கள் எப்படி சமாளிப்பார்கள் என கேள்வி எழுந்துள்ள நிலையில்,”பும்ரா என்னுடைய உடல்நிலை குறித்து கவலை இல்லை நான் வலிநிவாரண ஊசி போட்டு எப்படியாவது பந்து வீசுவேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!
மேலும் சாம்பியன்ஸ் கோப்பை அடுத்த மாதம் தொடங்க இருப்பதால் இந்த ஒரு ஆட்டத்தில் பும்ராவை விளையாட அனுமதித்து ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.ஆனால் பும்ரா நான் குறைந்த ஓவர்களை வீசிக்கொள்கிறேன் என கூறிருக்கிறார்.
பும்ராவின் இந்த உறுதியான செயலால் அணியில் உள்ள மற்ற வீரர்கள் நெகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல்,ரசிகர்கள் பலர் பும்ராவுக்காக இந்திய அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என வேண்டி வருகின்றனர்.நாளைய ஆட்டத்திலே இந்திய அணி வெற்றி பெறுமா பெறாத என்பது தெரிந்து விடும்.இதனால் நாளை நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என கூறப்படுகிறது.