6 பொணத்த காணோம்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

Author: Hariharasudhan
6 December 2024, 12:03 pm

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே புதைத்த ஆறு உடல்கள் காணாமல் போய்விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பூத்தாம்பட்டி அருகே உள்ள ஏ.டி.காலனியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (50) – கற்பகம் (45) தம்பதி. இந்த தம்பதியின் மகன் விஸ்வநாதன் (19), இவர் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில், இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், அவரின் சடலத்தை புதைப்பதற்காக புத்தாம்பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு உறவினர்கள் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்று பார்த்தபோது தங்கள் முன்னோர்கள் 7 பேரின் சடலங்களை, மணல் கொள்ளையர்கள் மணலுடன் சேர்த்து அள்ளிச் சென்றுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ‘நான் ‘ பட பாணியில் தாயை ‘அந்த ‘ நிலையில் பார்த்த மகன்.. கோர்ட் அதிரடி!

மேலும், மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே, தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம், மணல் கொள்ளை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதாவது, தமிழகத்தைச சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .

Buried bodies gone in Dindigul

தமிழகம் , பஞ்சாப் , மத்திய பிரதேசம் , மகாராஷ்டிரா , ஆந்திர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த 5 மாநிலங்களில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தவும் அவர் கோரியுள்ளார்.

  • கீர்த்தி முதல் நயன்தாரா வரை…தட்டி தூக்கிய ‘நெட்பிளிக்ஸ்’…கொத்தா இறங்கிய அப்டேட்கள்..!