கொளுந்து விட்டு எரிந்த கார்.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள் : வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2023, 8:47 pm

கேரள மாநிலம் வயநாடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த காரில் திடீர் தீ ஏற்பட்டு கார் முழுவதும் எரிந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த மூன்று தங்களது காரில் வயநாடு நோக்கி செல்லும் போது கார் மணந்தவாடி அருகே தாலம்புழா அருகே வரும் சாலையில் ஓடி கொண்டிருந்த காரில் திடீரென புகை வெளியேறியது.

இதை தொடர்ந்து கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேரும் காரை நிறுத்தி வெளியேறிய நிலையில் கார் தீ பற்றி எரிந்தன.

இதை தொடர்ந்து பொதுமக்களும் தீயணைப்பு துறை வீரர்களும் தீயை விரைந்து அணைத்த நிலையில் கார் முழுவதும் எரிந்து நாசமான மேலும் விபத்து காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • suriya asked whole bounded script to vetrimaaran for vaadivaasal shooting வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?