நடுரோட்டில் எரிந்த பிணம் : பயந்து ஓடிய பள்ளி மாணவ, மாணவிகள்… வெள்ளத்தால் தணிந்த சுடுகாடு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 12:49 pm

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சாலையோரம் முதியவரின் சடலத்தை எரிவதை கண்டு பயந்து ஓடிய பள்ளி மாணவ மாணவிகள் வீடியோ வைரலாகி வருகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி மற்றும் கே.ஆர்.எஸ் இரு அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கர்நாடக அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. தொடர்ந்து இடைவிடாத மழையின் காரணமாகவும், மேட்டூருக்கு செல்லும் நீரானது ஏரியூர், நெருப்பூர் உள்ள பகுதிகளிலும் விளை நிலங்கள் மற்றும் இடுகாடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

குறிப்பாக ஏரியூர் அடுத்துள்ள சித்திரைபட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய காவிரி ஆற்றங்கரையோரம் தான் அடக்கம் செய்து வருகின்றனர்.

ஆனால் மழை காலங்களில் அதிகளவு ஆற்றுகரையோரம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் முதியவர் ஒருவர் இறந்ததையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது மயானத்திற்கு செல்லும் வழிநெடுக்கிலும் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் செய்வது அறியாத அவர்கள் இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்தனர்.

பின்னர் இறந்து போன முதியவரின் இறுதி சடங்கை சாலையோபரத்திலேயே செய்தனர். பின்னர் வேறு வழியின்றி சாலையோரத்திலேயே முதியவின் சடலத்தை போட்டு எரித்தனர்.

அப்போது அந்த வழியாக பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பதறி ஓடினர். இந்த காட்சியை அப்பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளதால் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் காலங்களில் இது போன்று இடுகாடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் மேட்டுபகுதியில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 575

    0

    1