தலைவரையே தப்பா பேசுவியா?.. அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்..!

Author: Vignesh
26 August 2024, 4:30 pm

அதிமுகவிற்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே சமீப காலமாகவே தொடர்ந்து மோதல்கள் நிலவி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான் கிளைச் செயலாளர் பதவியில் இருந்து 52 ஆண்டு காலம் உழைத்தது தான் முதலமைச்சர், பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருக்கிறேன்.

ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர். அந்த கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. வேறு ஏதோ வழியில் இவர் பதவி பெற்றுள்ளார். அந்த பதவியை வைத்தது இன்று தலைக்கால் புரியாமல் அண்ணாமலை ஆடிக் கொண்டிருக்கிறார்.

EPS

மக்களைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவரின் ஒரே முதலீடு வாயும், நாக்கும்தான். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் மட்டும் பாஜகவுக்கு தேவை. தமிழக பாஜகவின் தலைவராக இருந்து அண்ணாமலை தமிழகத்திற்கு ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வரவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமிக்கு கடுமையாக பதில் அளித்துள்ளார். அதில், பச்சை மையால் 10 வருடமாக கையெழுத்து போட்டு ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத என்னை பத்தி பேசுறதுக்கு “தற்குறி” எடப்பாடிக்கு எந்தவித தகுதியும் கிடைக்காது என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியிருந்தார்.

annamalai-updatenews360

மேலும், பேசுகையில் நீங்கள் சொல்வது போல் நான் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வரவில்லை. உண்மைதான், ஆனால் நான் கட்சிக்குள் வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இரு திராவிட கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பதிலும், மோடியின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து கும்பகோணத்தில் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்