இறந்த 100 பேரை தடயமே இல்லாமல் புதைப்பா? மனநலக் காப்பகத்தில் மர்மம் : பந்தலூரில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2024, 8:28 pm

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி பெக்கி பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு டாக்டர் அகஸ்டின்(வயது60) என்பவர் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்.

இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 100க்கு மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அவர்கள் காப்பகம் அருகில் புதைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மன நல மருத்துவர் விவேக், தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, இந்த மன நல காப்பகம் முறையான அனுமதி பெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த காப்பகத்தில் இருந்த 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் பரிசோதனைக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.இந்த காப்பகத்தில் இருந்த 20 பேர் எப்படி இறந்தார்கள்? இறப்புக்கான காரணம் என்ன? அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா? என்பது மர்மமாகவே உள்ளது.

விசாரணை நடத்திய பிறகே இந்த காப்பகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அனுமதியின்றி காப்பகம் நடத்தி வந்த அகஸ்டின் அண்மையில் புதர் என்ற திரைப்படத்தை ரூ 2.43 கோடி செலவில் தயாரித்துள்ளார். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் அகஸ்டினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • vetrimaaran give voice over for harish kalyan diesel movie ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…