தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம் : ஆட்டம் பாட்டம் என கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்.. பொதுமக்கள் அவதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2023, 8:28 pm

தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம் : ஆட்டம் பாட்டம் என கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்.. பொதுமக்கள் அவதி!!!

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பஸ் டே கொண்டாட்டத்தின் போது ஏற்படும் வன்முறை காரணமாக பஸ் டே கொண்டாட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தடையை மீறும் மாணவர்களை கைது செய்யவும் உயர்நீதிமன்றம் தன்J உத்தரவில் கூறியுள்ளது. இந்நிலையில் தடையை மீறி கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள், அவினாசி சாலையில் திருப்பூர் செல்லும் தனியார் பேருந்தில் ‘பஸ் டே’ கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பேருந்துக்கு முன்பாக தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்டம் போட்ட மாணவர்கள், அவினாசி சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே பேருந்தை நிறுத்தி ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…