நேற்று ரூ.25.. இன்று 31 ரூபாயா..? அறிவிக்கபடாத கட்டண உயர்வா.. ? அரசுப் பேருந்து நடத்துநரிடம் பயணி வாக்குவாதம்!!
Author: Babu Lakshmanan19 April 2023, 9:40 pm
அரசுப் பேருந்தில் திடீரென கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பேருந்து கட்டண உயர்வு குறித்து பயணி ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வழியாக நாகர்கோவில் வரை தடம் எண் 576 அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் திசையன்விளையில் இருந்து வள்ளியூருக்கு செல்ல வழக்கமாக பயணச்சீட்டுக்கு 25 ரூபாய் பயண கட்டணமாக பெறப்படுகிறது. ஆனால், திடீரென திசையன்விளையில் இருந்து வள்ளியூர் செல்ல பயண கட்டணமாக 31 ரூபாய் நடத்துனர் கேட்டதால், சூடாகிப்போன பயணி பேருந்து நடத்துனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
பஸ் கட்டணம் குறித்த போக்குவரத்து துறையின் (Fair Table) முறையான அட்டவணைபடியே பயணக்கட்டணம் பெறுவதாகவும், தான் இன்று தான் இந்த ரூட்டில் நடத்துனராக வந்திருப்பதாக நடத்துனர் கூறியும், சமாதானம் அடையாத பயணி அறிவிக்கப்படாமல் பஸ் கட்டணம் கூடி உள்ளதா? பிஎம் இடம் கேளுங்கள்.. இல்லை.. ஜி எம் இடம் கேளுங்கள்.. சபாநாயகரிடம் கேட்டுருவோம். இல்ல போக்குவரத்து துறை மினிஸ்டரிடம் கேட்டுருவோம்… எல்லோருடைய நம்பரும் இருக்கு என்றவர், பஸ் கட்டணம் கூடியுள்ளது என்று சொல்லுங்கள் சட்டசபையில் பேசுவோம் என வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.