வால்பாறையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. வந்த தகவல்.. சீறிப் பாய்ந்த 15 ஆம்புலன்ஸ்கள் : உயிர் காக்கும் ஓட்டுநர்கள் வேண்டுகோள்!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2024, 4:59 pm
வால்பாறையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. வந்த தகவல்.. சீறிப் பாய்ந்த 15 ஆம்புலன்ஸ்கள் : உயிர் காக்கும் ஓட்டுநர்கள் வேண்டுகோள்!
பொள்ளாச்சியில் நேற்று இரவு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வால்பாறை 13வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து.
பொள்ளாச்சி மீனாட்சிபுரம் ஆனைமலை பகுதிகளில் இருந்த15 மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அரசு பேருந்து கவிழ்ந்ததாக சொல்லப்பட்ட 13வது கொண்டை ஊசி வளைவுக்கு சென்று பார்த்தபோது ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு சென்று விசாரித்த போது அப்படி ஒரு விபத்து நடக்கவில்லை என்றும் யாரோ பொய் தகவலை கொடுத்துள்ளார்கள். பெரும் விபத்து காப்பாற்ற வேண்டும் என்ற தகவல் உண்மை தகவல் இல்லை என்றும் இரவுகள் பார்க்காமல் உயிர் காக்கும் ஓட்டுனர்களாக இருக்கும் தங்களை பொய்யான தகவல்களை கொடுத்து மனவேதனைக்கு ஆளாக்க வேண்டாம் என்றும் உன் உண்மையான நிகழ்வு நடக்கும் போது வர முடியாமல் போவதற்கு வழிவகுக்கும் பொய்யான தகவல்களை தர வேண்டாம். இது எங்களை மனவேதனைக்கு ஆளாக்குவதாக அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர்.