சாலையில் திடீரென பழுதாகி நின்ற அரசுப் பேருந்து… ஐலேசா…ஐலேசா போட்டு தள்ளிய காவலர்கள் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 2:32 pm

புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்பட்ட அரசு பேருந்து பழுதாகி பாதியில் நின்ற நிலையில், அதனை பொதுமக்களோடு, போக்குவரத்து காவலர்களும் தள்ளி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயங்கி வருகிறது. தற்போது போக்குவரத்து துறையில் இயக்கப்படும் பேருந்துகள் பழுதாகி ஆங்காங்கே நின்று விடுகிறது.

இதேபோன்று, நேற்று மாலை புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பாகூர் வரை செல்லக்கூடிய நகர பேருந்து ஒன்று முருகம்பாக்கம் பகுதியில் சென்ற போது பழுதாகி நின்றது. பேருந்தை மீண்டும் இயக்க முயன்ற ஓட்டுநர் அதனை இயக்க முடியாததால், அதனை அறிந்த போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற பேருந்தை ஓரமாக தள்ளி சென்றனர்.

https://player.vimeo.com/video/897381215?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

பழுதாகி நின்ற பேருந்தை தள்ளி சென்ற போக்குவரத்து காவலர்கள் என்ற வாக்கியத்தோடு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?