எங்கேயும் எப்போதும் பட பாணியில் நிகழ்ந்த விபத்து… இரு பேருந்துகள் நேருக்கு மோதிய கோர விபத்தில் 4 பேர் பலி… ஏராளமானோர் படுகாயம்!!!

Author: Babu Lakshmanan
11 November 2023, 9:01 am

திருப்பத்தூர் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெங்களூரூவில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் மீடியனை உடைத்து கொண்டு, எதிரே வந்து கொண்டிருந்த சென்னையில் இருந்து பெங்களூரூவை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!