அதிக ஒலி எழுப்பி பொதுமக்களை அச்சுறுத்திய பேருந்துகள்.. அபராதம் விதித்து பறிமுதல் செய்த போலீசார்!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2024, 11:58 am

அதிக ஒலி எழுப்பி பொதுமக்களை அச்சுறுத்திய பேருந்துகள்.. அபராதம் விதித்து பறிமுதல் செய்த போலீசார்!

திண்டுக்கல் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்துவதாக வந்த புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்கங்கானிப்பாளர் பிரதீப் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிபின் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சினாமூர்த்தி சார்பு ஆய்வாளர் திலீப் குமார் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகமாக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்தி வந்த பேருந்துகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரண்டு சக்கர வாகனங்களில் சைலன்சர்களை பொறுத்தி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

40 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து தலா 10 ஆயிரம் வீதம் 3 பேருந்துகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டு சக்கர வாகனங்களில் அதிக அதிர்வை ஏற்படுத்தும் புகைபோக்கி பயன்படுத்திய 40 வாகனங்களுக்கு 42500 ரூபாய் அபராதம் விதித்து சைலன்சர்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் சைலன்சர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எச்சரிக்கை

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி