ஓட்டலில் பெண்ணுடன் உல்லாசம்… தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல் : 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
14 July 2022, 11:33 am

கோவை : ஓட்டலில் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மூன்று பேர் கும்பலை கோவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை அரசு கல்லூரி சேர்ந்த சேர்ந்த 63 வயதான தொழிலதிபர் ஒருவர் தங்கியிருந்தார். அவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்றதாகவும், அவருடன் பெண் ஒருவர் இருந்ததாகவும் தகவல் வாயிலாக கூறப்படுகிறது.

அப்போது, கையில் கத்தியுடன் அறையில் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த தொழில் அதிபரிடம் நீ எப்படி பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளலாம்..? என கேட்டு தொழிலதிபரை தாக்கியுள்ளனர். பின்னர், கத்திமுனையில் அவரை மிரட்டி தொழிலதிபர் மற்றும் அங்கிருந்த பெண்ணுடன் செல்போனில் நிர்வாண வீடியோ எடுத்துள்ளனர், என்று கூறப்படுகின்றது.

பின்னர், அவரிடம் இருந்த ரூ.1000 மற்றும் ஏடிஎம் கார்டை பறித்தனர். இதைத்தொடர்ந்து, தொழிலதிபரிடம், தற்போது எடுத்த இந்த நிர்வாண வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சமூக வலைதளத்தில் வெளியிடுவோம்’’ என மிரட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர், அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கினை பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கும்பலை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!