இதெல்லா நம்பியார் காலத்து டெக்னிக்… ட்ரோலில் சிக்கிய புஸ்ஸி ஆனந்த்.. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த VMI நிர்வாகிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 1:49 pm

இதெல்லா நம்பியார் காலத்து டெக்னிக்… ட்ரோலில் சிக்கிய புஸ்ஸி ஆனந்த்..சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த VMI நிர்வாகிகள்!

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தினரை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள் என உத்தரவிட்டு அவர் அமைதியாகி விட்டார்.

நடிகர் விஜய்யின் குட் புக்கில் இணைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இடத்திலும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆளுக்கொரு வேலையை பார்த்து வருகின்றனர். வீடியோக்கள் போடாமல் பல விஜய் ரசிகர்கள் தொண்டாற்றி பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர். சிலர், அரசியல் லாபத்திற்காக சீன் போட்டு சிக்கி வருவதை தான் ரசிகர்களும் நெட்டிசன்களும் கிண்டலடித்து வருகின்றனர்.

ஈசிஆர் சரவணன் முதியோர் இல்லத்துக்கு உணவு வழங்கிய வீடியோவில் ஒரு நிர்வாகி நடிகர் விஜய்யின் ஃபிரேம் போட்ட பெரிய போட்டோவை தூக்கிக் கொண்டு சென்றது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. சர்கார் ஸ்டைலில் விஜய் புதிய அரசியல் செய்வார் என பார்த்தால், இதெல்லாம் நம்பியார் காலத்து டெக்னிக் என சொல்வது போன்ற பழைய பாணி அரசியலையே அவரது மக்கள் இயக்கத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

போட்டோ தூக்கினது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்கிற அளவுக்கு புஸ்ஸி ஆனந்த் பண்ண வேலை தான் தற்போது சமூக வலைதளங்களில் செம ட்ரோல் மெட்டீரியலாகி உள்ளது. குப்பை இருக்கும் இடத்திலேயே கீழிருந்து குப்பையை அள்ளி மேலே அவர் போடுவது போன்ற வீடியோவை ஷேர் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர். களத்தில் இறங்கி அவர் வேலை செய்தாலும் குறை சொல்றீங்களே என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ