மக்களுக்கு ஏற்ற மாதிரி செய்வோம்… எதுவாக இருந்தாலும் இனி தலைவர் தான் ; புஸ்ஸி ஆனந்த் பேட்டி…!!
Author: Babu Lakshmanan3 February 2024, 9:19 am
மக்களுக்கு ஏற்ற மாதிரி செய்திடுவோம் என்று டெல்லியில் இருந்து திரும்பிய புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழக வெற்றி கழகம் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை வழங்கி உள்ளோம். மற்ற விவரங்களை தலைவர் அறிக்கையில் கூறி உள்ளார். கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளோம். இனி கட்சி கொள்கைகளை பற்றி பேச அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.
அவர்களிடம் கேட்டால் உரிய பதிலை தருவார்கள். எதுவாக இருந்தாலும் தலைவரின் அனுமதி பெற்று தான் சொல்ல முடியும். ரசிகர்கள் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தை வரவேற்றார்கள். மக்களுக்கு ஏற்ற மாதிரி செய்திடுவோம், எனக் கூறினார்.