மாற்றுக் கட்சியில் இருந்து காரில் வந்தாலும் அல்லது ஹெலிகாப்டரில் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியுள்ளார்.
விழுப்புரம்: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கலந்து கொண்டார்.
இதனையடுத்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் பெண்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய என்.ஆனந்த், “தமிழக வெற்றிக் கழத்தில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் 34 இடங்களில் விலையில்லா உணவகம் மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தளபதி விலையில்லா வீடு கட்டும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக வெற்றிக் கழகம் செயல்படுத்தி வருகிறது. மேலும், பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தவெகவில் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், உழைப்பவர்களுக்கு தான் கட்சியில் பதவி வழங்கப்படும். மாற்றுக் கட்சியில் இருந்து காரில் வந்தாலும் அல்லது ஹெலிகாப்டரில் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது” எனத் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுக்கு தற்போது தவெகவுக்குள்ளே புயல் கிளம்பியுள்ளது. காரணம், விசிகவில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் விலகி விஜயின் தவெகவில் இணைந்த ஆதர் அர்ஜுனாவுக்கு தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு, விஜய் செல்லும் இடங்களில் முன்வரிசையிலும் நிற்கிறார்.
இதையும் படிங்க: கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!
அதேபோல், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது எனக் கூறியிருப்பது வெறும் கண்துடைப்பு எனக் கூறுகின்றனர்.
அதேநேரம், திமுக, நாதக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் இருந்து மேலும் சிலர் விலகி தவெகவில் இணைய உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறி, திமுக உள்கட்டமைப்பு பணிகளை முடுக்கிவிடும் நிலையில், ஆனந்தின் இந்தப் பேச்சு தவெகவுக்கு பின்னடைவாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.