இ-பாஸ் இருந்தா மட்டும் வாங்க.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு.. ஊட்டி, கொடைக்கானல் வியாபாரிகள் எதிர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
7 மே 2024, 9:05 காலை
E Pass
Quick Share

இ-பாஸ் இருந்தா மட்டும் வாங்க.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு.. ஊட்டி, கொடைக்கானல் வியாபாரிகள் கோரிக்கை!

கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைவாசஸ்தலங்களில் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர்.

அதிக அளவு வந்து செல்வதால் இந்த மலை நகரங்களில் வாகன நெரிசல் பல மணி நேரம் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளும் பொது மக்களும் அவதி அடைந்து வந்தனர்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளும் கொடைக்கானலில் உள்ள பொதுமக்களும் அதே போல ஊட்டியில் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ஊட்டியில் உள்ள பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் இ பாஸ் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டது. இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்த மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் இன்று முதல் இ.பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இபாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்ல முடியும். இதன் அடிப்படையில் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தொடங்கியது.

மேலும் படிக்க: 93 தொகுதிகளில் தொடங்கியது 3ஆம் கட்ட வாக்குப்பதிவு.. வாக்களித்தார் பிரதமர் மோடி!!

இ பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் சோதனை செய்யப்பட்டு கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் பணியாளர்கள் இ பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்களை கொடைக்கானலுக்கு அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரே நேரத்தில் பல சுற்றுலாப் பயணிகள் இ பாஸ் பெறுவதற்கு வலைதளத்தில் முயன்று வருவதால் இபாஸ் வலைதளம் முடங்கி வருகிறது.

இதே போல உள்ளூர் வாகன உரிமை தாரர்களின் வாகனங்களுக்கு இ பாஸ் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இவற்றை சீர் செய்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உரிய இ பாஸ் கிடைப்பதற்கு உரிய நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும் கொடைக்கானல் வாழ் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 248

    0

    0