தமிழகத்தில் விரைவில் இடைத்தேர்தல்? மாநில தேர்தல் ஆணையத்தில் தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 4:06 pm

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துனர்.

இந்த நிலையில் திருமகன் ஈ.வெ.ரா மறைவை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று கூறப்படுகின்றது.

  • Game Changer trailer release ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
  • Views: - 348

    0

    0